/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பெருமாநல்லுாரில் கோலாகலம் ; ஈஸ்வரன், பெருமாள் கோவில் ஆக., 28ல் கும்பாபிேஷகம் பெருமாநல்லுாரில் கோலாகலம் ; ஈஸ்வரன், பெருமாள் கோவில் ஆக., 28ல் கும்பாபிேஷகம்
பெருமாநல்லுாரில் கோலாகலம் ; ஈஸ்வரன், பெருமாள் கோவில் ஆக., 28ல் கும்பாபிேஷகம்
பெருமாநல்லுாரில் கோலாகலம் ; ஈஸ்வரன், பெருமாள் கோவில் ஆக., 28ல் கும்பாபிேஷகம்
பெருமாநல்லுாரில் கோலாகலம் ; ஈஸ்வரன், பெருமாள் கோவில் ஆக., 28ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 30, 2024 09:04 PM

அனுப்பர்பாளையம்;பெருமாநல்லுாரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ தேவி, பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.
இரு கோவில்களிலும் கும்பாபிஷேகத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்; தொடர்ந்து, 9:00 மணி முதல் 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனை கூட்டம் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் நேற்று காலை நடந்தது.
எம்.எல்.ஏ., விஜயகுமார், செயல் அலுவலர் காளிமுத்து, முன்னாள் எம்.பி., சிவசாமி மற்றும் முன்னாள் அறங்காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் 3ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய கொடி மரம் அமைப்பது; இரு கோவில்களிலும் யாகசாலை, முகூர்த்தகால் பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அன்னதான கமிட்டி உள்ளிட்ட பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேகம் அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
----
பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் தொடர்பாக நேற்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது.