Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உளியாக உள்ளம் செதுக்கும் ஒளியாக கலாம் பொன்மொழிகள்! அக்னிச்சிறகே... ஏங்குகிறோம், மீண்டும் வலம் வர!

உளியாக உள்ளம் செதுக்கும் ஒளியாக கலாம் பொன்மொழிகள்! அக்னிச்சிறகே... ஏங்குகிறோம், மீண்டும் வலம் வர!

உளியாக உள்ளம் செதுக்கும் ஒளியாக கலாம் பொன்மொழிகள்! அக்னிச்சிறகே... ஏங்குகிறோம், மீண்டும் வலம் வர!

உளியாக உள்ளம் செதுக்கும் ஒளியாக கலாம் பொன்மொழிகள்! அக்னிச்சிறகே... ஏங்குகிறோம், மீண்டும் வலம் வர!

UPDATED : ஜூலை 27, 2024 02:45 AMADDED : ஜூலை 26, 2024 11:38 PM


Google News
கனவு காணுங்கள்; கனவு என்பது துாக்கத்தில் வருவது அல்ல; துாங்கவிடாமல் எது செய்கிறதோ அது தான் கனவு.

அழகைப் பற்றிக் கனவு காணாதீர்கள்; அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.

கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள்; அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை.

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே; அது உன்னைக் கொன்றுவிடும்.

கண்ணைத் திறந்து பார்; நீ அதை வென்றுவிடலாம்.

ஒரு முறை வந்தால் அது கனவு; இரு முறை வந்தால் அது ஆசை; பல முறை வந்தால் அது லட்சியம்.

துன்பங்களைச் சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.

கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று நிச்சயம் எதுவும் இல்லை.

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும்.

வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி.

உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன.

சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்.

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை.

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us