/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜீப் - பைக் மோதி விபத்து - இருவர் பலி; 6 பேர் காயம் ஜீப் - பைக் மோதி விபத்து - இருவர் பலி; 6 பேர் காயம்
ஜீப் - பைக் மோதி விபத்து - இருவர் பலி; 6 பேர் காயம்
ஜீப் - பைக் மோதி விபத்து - இருவர் பலி; 6 பேர் காயம்
ஜீப் - பைக் மோதி விபத்து - இருவர் பலி; 6 பேர் காயம்
ADDED : ஜூலை 17, 2024 08:47 PM

உடுமலை : உடுமலை சதாசிவம் வீதியைச்சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன், 24. தனியார் நிறுவன ஊழியர். எலையமுத்துாரைச்சேர்ந்த கட்டட தொழிலாளி, அரவிந்த், 28. இருவரும் நேற்று முன்தினம் இரவு, உடுமலை - மூணாறு ரோட்டில், உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மடத்துார் பிரிவு அருகே வந்த போது, எதிரே உடுமலையிலிருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்த, ஜீப் மோதியது. இதில், பைக்கில் வந்த, கோகுல கிருஷ்ணன், அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஜீப்பில் 9 பேர் பயணித்த நிலையில், ஜீப் டிரைவர், மறையூரை சேர்ந்த விக்னேஷ், 27, மூணாறை சேர்ந்த காஞ்சனா தேவி, 29, அவரது மகன் கிருஷ்ணதேவ், 2, மகள் ஸ்ரீ மானுஷா, 6, துாத்துக்குடியைச்சேர்ந்த, கார்த்திகேயன், 21, கார்த்திக், 21, ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.