ADDED : ஜூன் 22, 2024 12:46 AM
திருப்பூர்;தேனி, உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி, 44. திருப்பூர் லட்சுமி நகரில் ஒரு மேன்சனில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த, 2020ல், விடுதியில் வேலை செய்த, ரங்கநாயகி, 65 என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமுற்ற பால்பாண்டி, தள்ளி விட்டதில் ரங்கநாயகி கீழே விழுந்து காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தார்.
இதனால், போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பாண்டியைக் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், 3 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.