Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஐ.டி.ஐ., சேர அழைப்பு

ஐ.டி.ஐ., சேர அழைப்பு

ஐ.டி.ஐ., சேர அழைப்பு

ஐ.டி.ஐ., சேர அழைப்பு

ADDED : ஜூலை 07, 2024 11:12 PM


Google News
திருப்பூர்:திருப்பூர், தாராபுரம், உடுமலை அரசு ஐ.டி.ஐ.,யில் பயில விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கல்வி கட்டணமில்லாமல், ஐ.டி.ஐ., பயில, மாதம், 750 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இலவச பஸ் பாஸ், சைக்கிள், வரைபட கருவி, பாடப்புத்தகம், சீருடைகள் வழங்கப்படும். பெண்களுக்கு, புதுமை பெண் திட்டத்தில், மாதம், 1000 ரூபாய் வழங்கப்படும்.

விருப்பமுள்ள மாணவ, மாணவியர், திருப்பூர், தாராபுரம், உடுமலை ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 99428 11559, 86680 41629, 99442 06017 என்ற எண்களில் அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

*





      Our Apps Available On




      Dinamalar

      Follow us