/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மனிதரை மாமனிதராக்குவது பணம் அல்ல; மனம்' 'மனிதரை மாமனிதராக்குவது பணம் அல்ல; மனம்'
'மனிதரை மாமனிதராக்குவது பணம் அல்ல; மனம்'
'மனிதரை மாமனிதராக்குவது பணம் அல்ல; மனம்'
'மனிதரை மாமனிதராக்குவது பணம் அல்ல; மனம்'
ADDED : ஜூன் 05, 2024 12:48 AM

பல்லடம்:பல்லடம் 'வனம்' அமைப்பின் வான்மழை மாதாந்திர கருத்தரங்கம், வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. அதன் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜ் வரவேற்றார்.
சென்னை கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் பூமிநாதன் பேசியதாவது:
மேற்கு மண்டலத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு என தனிச்சிறப்பு உள்ளது. கடின உழைப்பு உண்மையுடன், பொதுநலத்துடன் சிந்திக்கும் தொழிலதிபர்கள் கொங்கு மண்டலத்தில்தான் உள்ளனர்.
மனிதர்களை மாமனிதர்களாக மாற்றுவது பணம் அல்ல; மனம்தான். ஆனால், இன்று பணம், மனிதர்களின் மனதை கெடுக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டில் ஒரு மரம்கூட நான் நட்டதில்லை. முதன்முதலாக இங்கு மரம் நட்டுள்ளேன்.
'வனம்' அமைப்பு போன்ற அறக்கட்டளைகள் நாடு முழுவதும் ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசு பணி என்பது உயர்ந்த பணி. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பொறுத்துதான் அதில் மகிழ்ச்சி உள்ளது. அரசு அதிகாரிகளில் நல்ல அதிகாரிகளும் உள்ளனர்.
கீழ்மட்ட அளவில் உள்ள அதிகாரிகள் ஒரு சிலர் செய்யும் தவறுகளால், ஒட்டுமொத்த அரசு அதிகாரிகள் மீதும் களங்கம் ஏற்படுகிறது.
அரசு அதிகாரிகள் இல்லையெனில், கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து இன்று இங்குள்ள பெரும்பாலானவர்கள் காணாமல் போயிருப்போம். பலர் உயிரைக் கொடுத்து வேலை பார்த்தார்கள்.
அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள் பலர் உயிரைக்கொடுத்து உயிரை பாதுகாத்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை கலெக்டர் அலுவலக நில அளவை பதிவேடுகள் துறை தொழில் நுட்ப மேலாளர் முத்துராஜா, ஆலம் விழுது ஆனைமலை குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.