Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 40 தொகுதி வாரிக்கொடுத்த மக்களுக்கு கள்ளச்சாராய மரணங்கள்தான் பரிசா? பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

40 தொகுதி வாரிக்கொடுத்த மக்களுக்கு கள்ளச்சாராய மரணங்கள்தான் பரிசா? பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

40 தொகுதி வாரிக்கொடுத்த மக்களுக்கு கள்ளச்சாராய மரணங்கள்தான் பரிசா? பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

40 தொகுதி வாரிக்கொடுத்த மக்களுக்கு கள்ளச்சாராய மரணங்கள்தான் பரிசா? பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

ADDED : ஜூன் 25, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், திருப்பூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜெயராமன் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது. எதிர்க்கட்சி தலைவர் சட்டசபையில் கூறியும், தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளை வாரிக்கொடுத்த மக்களுக்கு, தி.மு.க., இன்று கொடூர கள்ளச்சாராய மரணத்தை பரிசாக வழங்கியிருக்கிறது.

அ.தி.மு.க., ஆட்சியின் போது, மணப்பாறை அருகே, ஒரு குழந்தை 'போர்வெல்' குழியில் விழுந்து இறந்தது; ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று ஒப்பாரி வைத்தனர். தோழமை கட்சிகளும் சத்தமாக ஒப்பாரி வைத்தன; இன்று, 57 பேர் பலியாகியும் வாய்மூடி மவுனமாகி, ஓடி ஒளிந்துவிட்டனர். ஏழை குடும்பங்களின் கண்ணீர், கூரிய வாளுக்கு சமமானது; தி.மு.க.,வைப் பழிவாங்கியே தீரும்.

வரும் 2026 வரை தமிழகம் தாங்காது. மக்களை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின் தேவையா என்பதை மக்களே முடிவு செய்வர்; தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டுவர்.

இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us