Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழில் கூட்டுறவு சங்கத்தில் இணை உறுப்பினராக அழைப்பு

தொழில் கூட்டுறவு சங்கத்தில் இணை உறுப்பினராக அழைப்பு

தொழில் கூட்டுறவு சங்கத்தில் இணை உறுப்பினராக அழைப்பு

தொழில் கூட்டுறவு சங்கத்தில் இணை உறுப்பினராக அழைப்பு

ADDED : ஜூலை 23, 2024 11:35 PM


Google News
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், பல்லடத்தில் பெண்கள் எழுது பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தையல் தொழிலாளர் தொழிற் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தில், இணை உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்கு உட்பட்ட மகளிராகவும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்கவேண்டும். ஆண்டு வருவாய், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். அரசு அனுமதி பெற்ற தையல் பயிற்சி மையத்தில், குறைந்தபட்சம் 6 மாத பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ், பள்ளி கல்வி சான்று, ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைக்கவேண்டும்.

பல்லடம் பெண்கள் எழுது பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் தையல் தொழிலாளர்கள் தொழிற் கூட்டுறவு சங்கம், 9/114, படேல் ரோடு, பல்லடம், திருப்பூர் மாவட்டம், என்கிற முகவரியில், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 97870 81304, 90420 12307 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us