/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம் அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
ADDED : ஜூன் 14, 2024 12:04 AM

திருப்பூர்,: திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி முதல் கட்ட கவுன்சிலிங் நாளை (15ம் தேதி) நிறைவு பெறுகிறது.
திருப்பூர், காலேஜ் ரோடு, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் இளநிலைப் பட்டப்படிப்புக்கு, 808 இடங்கள் உள்ளது. சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங், மே, 30ல் நடந்தது.
பொதுப்பிரிவுக்கு கவுன்சிலிங், கடந்த, 10ம் தேதி துவங்கியது. நான்கு நாட்களில் நடந்த கவுன்சிலிங்கில், 250க்கும் அதிகமாக இடங்கள் பூர்த்தியாகி உள்ளது.
'கவுன்சிலிங்' குறித்து, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:
வணிகவியல், அறிவியல் பாடப்பிரிவில் குறிப்பிட்ட சில இடங்கள் காலியாக உள்ளன. அறிவியல் பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங், தரவரிசைப் பட்டியலில், 2001 முதல், 4,000 வரை உள்ளவர்களுக்கும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தரவரிசை, 2,001 முதல், 3,000 வரை உள்ளவர்களுக்கு நாளை கவுன்சிலிங் நடக்கிறது.
இதற்கு முன் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாதவர்களும் தரவரிசை பட்டியலில் 4,000 வரை உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கு மொபைல் போன், இ மெயிலுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இத்துடன் முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவு பெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எல்.ஆர்.ஜி., கல்லுாரி
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மொத்தமுள்ள, 1,066 இடங்களில் நான்கு நாட்களில், 654 இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. நாளையுடன் முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரும் 24ல் நடக்கவுள்ளது.
பல்லடம் அரசு கல்லுாரியில் மொத்தமுள்ள, 500 இடங்களில், 373 இடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில், 364 இடங்களுக்கு, 156 இடங்கள், தாராபுரம் அரசு கல்லுாரியில், 230 இடங்களுக்கு, 128 இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இக்கல்லுாரிகளின் அடுத்த கட்ட கவுன்சிலிங் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.