/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மலை கிராமத்துக்கு ரோடு அமைக்கும் பணி கலெக்டர் தலைமையில் ஆய்வு மலை கிராமத்துக்கு ரோடு அமைக்கும் பணி கலெக்டர் தலைமையில் ஆய்வு
மலை கிராமத்துக்கு ரோடு அமைக்கும் பணி கலெக்டர் தலைமையில் ஆய்வு
மலை கிராமத்துக்கு ரோடு அமைக்கும் பணி கலெக்டர் தலைமையில் ஆய்வு
மலை கிராமத்துக்கு ரோடு அமைக்கும் பணி கலெக்டர் தலைமையில் ஆய்வு
ADDED : ஜூலை 08, 2024 01:03 AM

உடுமலை:குருமலை மலைவாழ் கிராமத்துக்கு ரோடு அமைத்தல் மற்றும் காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்து, திருப்பூர் கலெக்டர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்தில், குருமலை, மேல்குருமலை, கருமுட்டி, ஆட்டுமலை, குழிப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. கிராமங்களுக்கு ரோடு வசதியில்லாத காரணத்தால், மலைவாழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர்.
திருமூர்த்திமலை அடிவாரத்தில் இருந்து குருமலை வரை ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்த மக்கள், கடந்தாண்டு தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக, திருமூர்த்திமலை முதல் குருமலை வரை, 3.150 கி.மீ.,க்கு ரோடு அமைக்க, முதற்கட்டமாக 48 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தளி பேரூராட்சி வாயிலாக விரைந்து பணியை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டது. பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்து திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ், மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார்மீனா, தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். குருமலை ரோடு, நல்லாறு - வல்லக்குண்டாபுரம், ஜிலோபநாயக்கன்பாளையம் - வல்லக்குண்டாபுரம் ரோடுகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
திருமூர்த்திமலை அடிவாரத்தில், தளி கிராமத்தில் அமைந்துள்ள, 88.67 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுக்காக திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தினர்.
மேலும், காண்டூர் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளையும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.