/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
ADDED : ஜூலை 20, 2024 01:41 AM
உடுமலை;உடுமலை அமராவதி அணையிலிருந்து, உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, உடுமலை அருகேயுள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனையடுத்து, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை, 5:30க்கு அணை நிரம்பியதையடுத்து, ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு, நீர்வரத்து அதிகரித்ததால், வெளியேற்றம், 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 88.13 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,0477 மில்லியன் கனஅடியில், 3,887.82 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, 4,556 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது. 3,800 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.