/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க விழா திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க விழா
திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க விழா
திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க விழா
திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க விழா
ADDED : ஜூலை 23, 2024 11:46 PM

திருப்பூர்:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் மற்றும் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி நிர்வாகம் இணைந்து, இலவச தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், நிப்ட்-டீ கல்லுாரியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மைய துவக்க விழா, நேற்று நடைபெற்றது. நிப்ட்-டீ கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம், நிர்வாக தலைவர் மோகன், திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் மோகனசுந்தரம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆடை உற்பத்தி பயிற்சியில் இணைந்துள்ள பெண்களுக்கு, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. கிராமப்புற பெண்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளித்து, அவர்களை தொழில்முனைவோராக மாற்றுவது; பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக இப்பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.