/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிருஷ்ணா மஹால் திறப்பு ;கீர்த்தி விநாயகருக்கு கும்பாபிேஷகம் கிருஷ்ணா மஹால் திறப்பு ;கீர்த்தி விநாயகருக்கு கும்பாபிேஷகம்
கிருஷ்ணா மஹால் திறப்பு ;கீர்த்தி விநாயகருக்கு கும்பாபிேஷகம்
கிருஷ்ணா மஹால் திறப்பு ;கீர்த்தி விநாயகருக்கு கும்பாபிேஷகம்
கிருஷ்ணா மஹால் திறப்பு ;கீர்த்தி விநாயகருக்கு கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 10, 2024 02:20 AM

பொங்கலுார்;அவிநாசிபாளையம் நால்ரோட்டில் கிருஷ்ணா மஹால் திருமண மண்டபம் திறக்கப்பட்டது. மண்டப வளாகத்தில் கீர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
பொங்கலுார் அடுத்த அவிநாசிபாளையம் நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிருஷ்ணா மஹால் திருமண மண்டப திறப்பு விழா நேற்று நடந்தது. கணபதி ஹோமம், லட்சுமி, சரஸ்வதி பூஜைகள் நடந்தன. கிருஷ்ணா மஹால் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கீர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை காங்கேயம் ஸ்ரீ சிவ துர்க்கை அம்மன் கோவில் அர்ச்சகர் முரளிதர குருக்கள் நடத்தி வைத்தார். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனர். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணா மஹால் நிர்வாகிகள் செய்திருந்தனர்.