/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வளர்ச்சிக்கு உதவி கேட்டுத்தான் வந்துள்ளேன் ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம் வளர்ச்சிக்கு உதவி கேட்டுத்தான் வந்துள்ளேன் ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம்
வளர்ச்சிக்கு உதவி கேட்டுத்தான் வந்துள்ளேன் ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம்
வளர்ச்சிக்கு உதவி கேட்டுத்தான் வந்துள்ளேன் ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம்
வளர்ச்சிக்கு உதவி கேட்டுத்தான் வந்துள்ளேன் ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம்
ADDED : ஜூலை 28, 2024 12:07 AM

திருப்பூர்;தமிழகத்தை போல், மத்திய பிரதேசத்தையும் தொழில்கள் துவங்கி, வளர உதவுங்கள் என, அம்மாநில முதல்வர் மோகன்யாதவ் திருப்பூர் தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், பல்வேறு சலுகைகளை அறிவித்து, தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு, தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம், அம்மாநில அரசு அதிகாரிகள் குழு, கோவையில் முகாமிட்டு, தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்தது.
அதனை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், கடந்த, 25 ம் தேதி, கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் அமைப்பினரை சந்தித்தார். திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்பு நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அதில், பங்கேற்ற இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார்துரைசாமி கூறியதாவது:
கோவையில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில், ம.பி., முதல்வர் மோகன் யாதவ் பேசுகையில், 'தமிழகத்தில் உள்ள தொழிலை, எங்கள் மாநிலத்துக்கு கொண்டு செல்வதற்காக வரவில்லை. தமிழ்நாட்டை போலவே, எங்கள் மாநிலத்தையும் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக வளர செய்ய வேண்டும். அதற்காக உதவி கேட்டு தான் வந்திருக்கிறோம்,' என்று தனது பேச்சை துவக்கினார்.
மாநில முதல்வர் என்ற பெரிய கெடுபிடி எதுவும் இல்லாமல், சக மனிதனாக அவர், நண்பரை போல் பேசியதும், எதார்த்தமாக பேசியதும், தொழில்துறையினரை மிகவும் கவர்ந்துள்ளது. எங்களை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கவுவர தலைவர் சக்திவேல், ம.பி., முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை காட்டிலும், சிரித்த முகமும், எளிதான அணுகுமுறையும், அதிகளவில் முதலீடுகளை பெற்றுத்தரும் என்று நம்பிக்கையூட்டினோம். அப்போது, மிகவும் உற்சாகமாகி, அனைவரும் ம.பி., வரவேண்டுமெனவும் அழைப்பும் விடுத்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.