/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஹிந்து அன்னையர் முன்னணி தீர்த்தக்குட ஊர்வலம் ஹிந்து அன்னையர் முன்னணி தீர்த்தக்குட ஊர்வலம்
ஹிந்து அன்னையர் முன்னணி தீர்த்தக்குட ஊர்வலம்
ஹிந்து அன்னையர் முன்னணி தீர்த்தக்குட ஊர்வலம்
ஹிந்து அன்னையர் முன்னணி தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஜூலை 27, 2024 12:11 AM

திருப்பூர்;திருப்பூரில் ஹிந்து அன்னையர் முன்னணி அமைப்பு சார்பில் நேற்று ஆடி 2வது வெள்ளி முன்னிட்டு, தீர்த்தக் கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம், அம்மன் கோவிலில் அபிேஷகம் ஆகியன நடத்தப்பட்டன.
கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் செல்வ விநாயகர் கோவிலிலிருந்து இந்த ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கூனம்பட்டி ஆதீனம், ஸ்ரீராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகள் அருளுரை வழங்கினார். கலைவாணி ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
திருநீலகண்டபுரத்தில் துவங்கிய ஊர்வலம் பல்வேறு பகுதிகள் வழியாக, பி.என்., ரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் வந்தடைந்தது. அங்குள்ள கோட்டை ஈஸ்வரி அம்மனுக்கு பெண்கள் தீர்த்த அபிேஷகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. நிகழ்ச்சியை ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி வடக்கு கோட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
---திருப்பூர் வடக்கு கோட்ட ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.