/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு
ADDED : ஜூலை 18, 2024 12:03 AM
திருப்பூர் : திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நாளை (19ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து, திருப்பூர் சப்- கலெக்டர் சவுமியா ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், வரும், 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை, 4:00 மணிக்கு, சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது.
இக்கூட்டத்தில், திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட, அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கையை தெரிவித்து தீர்வு பெறலாம்,' என்று தெரிவித்துள்ளார்.