ADDED : ஜூலை 28, 2024 12:22 AM

திருப்பூர்:'டிரீம் -20' பசுமை அமைப்பு சார்பில், முன்னாள் ஜனாதிபதியின், 9ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
வனத்துக்குள் திருப்பூர் மற்றும் 'டிரீம் -20' பசுமை அமைப்பு சார்பில், நல்லிக்கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள, திருநகரில், பொதுமக்களுடன் இணைந்து, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. திருநகர் 5வது வீதியில், இரண்டு மரம் வீதம், 26 வீடுகளுக்கு, 52 மரக்கன்றுகள் நடப்பட்டது. வாகை, சொர்க்கமரம், மகோகனி, செண்பகம், மந்தாரை மரக்கன்றுகள் நடப்பட்டது.
'கலாமின் புகழ், காலங்களை தாண்டி, பசுமையான சூழலில் நம்முடன் பயணிக்க, ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்று உறுதியேற்றனர்.
திருப்பூர் 'நிட்மா' சங்கத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சங்க தலைவர் ரத்தினசாமி தலைமையில், கலாம் படத்துக்கு, மலர் மரியாதை செய்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா) மற்றும் ஜீவநதி நொய்யல் சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.