ADDED : ஜூலை 10, 2024 11:37 PM
காங்கயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பயணிகளுடன் நேற்று முன்தினம் காலை திருப்பூர் நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. சிவன்மலை பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த, இரு மாணவர்கள் பஸ்சில் ஏறினர். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நடத்துனர், மாணவர்களை கீழே இறக்கி விட்டார். பின், வேறு பஸ் மூலம் படியூரில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர்.
வீட்டுக்கு மாலை திரும்பிய மாணவர்கள் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். நேற்று காலை, பஸ் ஸ்டாப்பில் திரண்டிருந்த பெற்றோர் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் அவ்வழியாக வந்த அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் போலீசார் பேச்சு நடத்தியதால், மக்கள் கலைந்து சென்றனர்.