/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசுப்பள்ளி மாணவர்கள் அபாரம்: 'நீட்' தேர்வில் மாநில சாதனை :மருத்துவர் கனவு நனவாகிறது அரசுப்பள்ளி மாணவர்கள் அபாரம்: 'நீட்' தேர்வில் மாநில சாதனை :மருத்துவர் கனவு நனவாகிறது
அரசுப்பள்ளி மாணவர்கள் அபாரம்: 'நீட்' தேர்வில் மாநில சாதனை :மருத்துவர் கனவு நனவாகிறது
அரசுப்பள்ளி மாணவர்கள் அபாரம்: 'நீட்' தேர்வில் மாநில சாதனை :மருத்துவர் கனவு நனவாகிறது
அரசுப்பள்ளி மாணவர்கள் அபாரம்: 'நீட்' தேர்வில் மாநில சாதனை :மருத்துவர் கனவு நனவாகிறது
ADDED : ஜூன் 07, 2024 12:55 AM

திருப்பூர்:'நீட்' தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் மாநில முதலிடம் பெற்றார்; இதேபோல் மறுதேர்வு எழுதியோர் பிரிவில் மாணவி பவானி சாதித்துள்ளார். 'ஆண்டுக்காண்டு தேர்வெழுதுவோர் மற்றும் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நடந்த 'நீட்' தேர்வை, நாடு முழுக்க, 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். திருப்பூர் மாவட்ட அளவில், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி, ஏ.வி.பி., கல்லுாரி, லிட்டில் கிங்டம் பள்ளி மற்றும் வித்யாசாகர் பப்ளிக் பள்ளி என, 4 தேர்வு மையங்களில், 2,200 மாணவ, மாணவியர் 'நீட்' தேர்வெழுதினர். 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின.
* அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில், ஊதியூர் சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய், 687 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
* மறுதேர்வு எழுதியோர் பிரிவில், கணபதிபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவானி, 650 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
* திருப்பூர் மாவட்ட அளவில், அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வெழுதிய மாணவ, மாணவியரை பொறுத்தவரை, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரூபாஸ்ரீ, 441 மதிப்பெண் பெற்றார்.
கடந்தாண்டுகளைக் காட்டிலும் 'நீட்' தேர்வெழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரின் மதிப்பெண்களும் உயர்ந்து வருகின்றன. இதேபோல் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பலரும், 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.