/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோழிக்கு பதில் ஆடு: விவசாயிகள் வேதனை கோழிக்கு பதில் ஆடு: விவசாயிகள் வேதனை
கோழிக்கு பதில் ஆடு: விவசாயிகள் வேதனை
கோழிக்கு பதில் ஆடு: விவசாயிகள் வேதனை
கோழிக்கு பதில் ஆடு: விவசாயிகள் வேதனை
ADDED : ஜூலை 02, 2024 11:50 PM

பல்லடம்;கோழிகளுக்கு பதிலாக, ஆடுகள், தெரு நாய்களுக்கு இரையாகி வருவது, விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
கறிக்கோழி உற்பத்தி பரவலாக நடந்து வரும் பல்லடம் வட்டாரத்தில், செத்த கோழிகள், அழுகிய முட்டைகள், கோழி கழிவுகள் உள்ளிட்டவற்றை திறந்தவெளியில் வீசி செல்வது அதிக அளவில் நடக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இவ்வாறு, திறந்த வெளியில் வீசப்படும் செத்த கோழிகள், கழிவுகளால் விவசாயிகளுக்கு புதியதொரு பிரச்னை உருவெடுத்துள்ளது.
விவசாயிகள் சிலர் கூறியதாவது:
செத்த கோழிகளை முறையாக புதைக்காமல் ஆங்காங்கே திறந்த வெளியில் வீசி செல்வதால், தெரு நாய்கள் அவற்றை ருசி பார்க்கின்றன. தொடர்ந்து, இவற்றை உண்டு பழகும் தெரு நாய்கள், செத்த கோழிகள் கிடைக்காத போது, ஆடுகள், கன்றுக்குட்டிகளை கொல்கின்றன.
இதனால், தோட்டங்களில் வளர்க்கப்படும் கோழிகள், ஆடுகள், கன்றுக்குட்டிகளை தெரு நாய்கள் இடமிருந்து பாதுகாக்க வேண்டி உள்ளது. எனவே, தாலூகாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செத்த கோழிகள், கோழிக்கழிவுகளை திறந்த வெளியில் வீசுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.