/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அதிக முறை பஸ் பயணம்; பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அதிக முறை பஸ் பயணம்; பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
அதிக முறை பஸ் பயணம்; பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
அதிக முறை பஸ் பயணம்; பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
அதிக முறை பஸ் பயணம்; பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
ADDED : ஜூன் 16, 2024 10:59 PM

திருப்பூர் : அதிக முறை எஸ்.இ.டி.சி., பஸ்சில் பயணம் செய்த திருப்பூர் பெண்ணுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
அரசு விரைவு போக்கு வரத்து கழக (எஸ்.இ.டிசி.,) பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்கப்படுத்த, அதிக முறை பயணம் செய்த பயணி களுக்கு, குலுக்கல் முறையில் தேர்வு செய்து போக்குவரத்து கழகம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், ஊட்டியில் இருந்து மார்த்தண்டத்துக்கு பஸ்சில் அதிக முறை பயணம் செய்த பயணிகள் குலுக்கல் சமீபத்தில் நடந்தது. இதில், திருப்பூர், பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை, கஸ்துாரி, 26 தேர்வானார். இவருக்கு நேற்று மத்திய பஸ் ஸ்டாண்டில், 10 ஆயிரம் ரூபாய் பரிசை, திருப்பூர் மண்டல மேலாளர் (பொறுப்பு) செல்வக்குமார், பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்திரன், பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோதிமணிகண்டன் உட்பட கிளைமேலாளர் வழங்கினர்.
பரிசு பெற்ற கஸ்துாரி கூறுகையில், ''ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எஸ்.இ.டி.சி., பஸ்சில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். அரசு பஸ்களை நம்பி, இரவில் தாராளமாக பயணிக்கலாம். பெண் தனியாக பயணிக்கும் போது பாதுகாப்பு உள்ளது.
10 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து, அரசு பஸ்களில் பயணிப்பேன்,' என்றார்.