/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவச கண் சிகிச்சை ஸ்ரீசத்ய சாய் 'சேவை' இலவச கண் சிகிச்சை ஸ்ரீசத்ய சாய் 'சேவை'
இலவச கண் சிகிச்சை ஸ்ரீசத்ய சாய் 'சேவை'
இலவச கண் சிகிச்சை ஸ்ரீசத்ய சாய் 'சேவை'
இலவச கண் சிகிச்சை ஸ்ரீசத்ய சாய் 'சேவை'
ADDED : ஜூலை 07, 2024 11:25 PM

திருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் கண்பரிசோதனை முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது.
திருப்பூர் பி.என்., ரோடு மில்லர் பஸ் ஸ்டாப் ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடந்த முகாமில், மொத்தம், 213 பேர் பங்கேற்றனர்; 89 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது; 35 பேர் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.