Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உழவர் சந்தைக்கு வாடகை நிர்ணயம்; வேளாண் துறைக்கு மாநகராட்சி கடிதம்

உழவர் சந்தைக்கு வாடகை நிர்ணயம்; வேளாண் துறைக்கு மாநகராட்சி கடிதம்

உழவர் சந்தைக்கு வாடகை நிர்ணயம்; வேளாண் துறைக்கு மாநகராட்சி கடிதம்

உழவர் சந்தைக்கு வாடகை நிர்ணயம்; வேளாண் துறைக்கு மாநகராட்சி கடிதம்

ADDED : ஆக 06, 2024 11:26 PM


Google News
திருப்பூர்: மாநகராட்சி பகுதியில் செயல்படும் உழவர் சந்தை வளாகங்களுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை நிலுவை தொகையுடன் செலுத்த வலியுறுத்தி வேளாண் துறைக்கு கடிதம் அனுப்பப்படவுள்ளது.

உழவர் சந்தைக்கு, மாநகராட்சி பகுதியில் 25 ஆயிரம் ரூபாய், நகராட்சி பகுதியில் 15 ஆயிரம் ரூபாய் ஆண்டு வாடகை சலுகை விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 24 ஆண்டுகளாக இதற்கான வாடகையை வேளாண் வணிகத்துறை செலுத்தவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு நகராட்சி நிர்வாக ஆணையகம் இந்த வாடகை தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங் களுக்கு அறிவுறுத்தியது.

திருப்பூர் மாநகராட்சியில் தெற்கு உழவர் சந்தை பல்லடம் ரோட்டில் 1.35 ஏக்கர் பரப்பிலும், வடக்கு உழவர் சந்தை பி.என்.,ரோட்டில் 1.15 ஏக்கர் பரப்பிலும் கடந்த 2000ம் ஆண்டு முதல் நிலம் வழங்கி, செயல்பட்டு வருகின்றன.

அவ்வகையில், மாநகராட்சி பகுதியில் செயல்படும் இரு உழவர் சந்தைகளுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தீர்மானம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனடிப்படையில், மாநகராட்சி வருவாய் பிரிவினர் உரிய மண்டல உதவி கமிஷனர்களுக்கு இதுகுறித்து பரிந்துரைத்துள்ளனர்.

அதன்படி வேளாண் வணிகத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு இதற்கான கடிதம் உரிய மண்டல உதவி கமிஷனர்கள் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us