ADDED : ஜூன் 05, 2024 12:25 AM
அனுப்பர்பாளையம்:லோக்சபா தேர்தலில், விருது நகர் தொகுதியில் தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார்.வாக்கு எண்ண தொடங்கியதும் காலை முதல் விஜய பிரபாகரன், முன்னிலையில் இருந்து வந்தார்.
வாக்கு எண்ண எண்ண பல சுற்றுகள் தொடர்ந்து, விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்ததால், அவரது கட்சியினர் உற்சாகத்தில் இருந்தனர்.
திருப்பூர் நிர்வாகிகள் வெற்றியை கொண்டாட பட்டாசு, பொதுமக்களுக்கு வழங்க இனிப்பு ஆகியவை வாங்கி வைத்தனர்.
வெற்றி அறிவித்ததும் அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., பஸ் ஸ்டாப் அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்க இடத்தையும் தேர்வு செய்து இருந்தனர்.
திடீரென விஜயபிரபாகரன் பின்னடைவு என தகவல் கிடைத்ததும், உற்சாகத்தில் இருந்த கட்சியினர் சோர்வாயினர்.
இனி வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்ததும், வீடுகளுக்குத் திரும்பினர்.