/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சக்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா சக்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
சக்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
சக்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
சக்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
ADDED : மார் 14, 2025 10:48 PM

உடுமலை; உடுமலை ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக தின முதலாம் ஆண்டு விழா நடந்தது.
உடுமலை முத்தையா பிள்ளை லே அவுட் பகுதியில், ஸ்ரீ சக்தி விநாயகர், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. இதன் முதலாமாண்டு தின விழா நேற்று நடந்தது.
காலை, 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலசம் புறப்பாடு, சுவாமிக்கு மகா அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.