Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிரம்பும் நீர்நிலைகள்: கண்காணிப்பு அவசியம்

நிரம்பும் நீர்நிலைகள்: கண்காணிப்பு அவசியம்

நிரம்பும் நீர்நிலைகள்: கண்காணிப்பு அவசியம்

நிரம்பும் நீர்நிலைகள்: கண்காணிப்பு அவசியம்

ADDED : ஜூன் 05, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
பல்லடம்: தொடர் மழை காரணமாக, நீர்நிலைகள் நிறைந்து வரும் சூழலில், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, ஊராட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும், கோடை மழை பரவலாக பெய்தது. சில பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தன.

பல்லடம் வட்டாரத்தில் மட்டும், கோடை மழை, 104 மி.மீ., பெய்துள்ளது. இதன் காரணமாக, ஒன்றிய பகுதிகளில் உள்ள குளம் - குட்டைகள் உள்ளிட்டவை ஓரளவு நிரம்பி உள்ளன.

நீர் நிறைந்த குளம் - குட்டைகள், பாறைக்குழிகள் உள்ளிட்டவற்றில், குளிப்பது துணி துவைப்பது உள்ளிட்ட பணிகளை பொதுமக்கள் மேற்கொள்கின்றனர். இதற்கிடையே, சிறுவர்கள் பலர் விளையாட்டுத்தனமாக குளிக்கச் செல்கின்றனர். இதுபோல், ஆழம் தெரியாமல் நீர்நிலைகளில் குளிக்கச் சென்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் ஏராளமாக நடந்துள்ளன. இருப்பினும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. எனவே, பருவமழை துவங்க உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க வேண்டியது அவசியம். ஆபத்து உள்ள இடங்களில் கட்டாயம் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us