Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோப்புகள் தேக்கம்... படிப்படியாக நகரும்

கோப்புகள் தேக்கம்... படிப்படியாக நகரும்

கோப்புகள் தேக்கம்... படிப்படியாக நகரும்

கோப்புகள் தேக்கம்... படிப்படியாக நகரும்

ADDED : ஜூன் 08, 2024 12:51 AM


Google News
திருப்பூர்;தேர்தல் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்றுமுதல், வழக்கமான அலுவல் பணிகளில் சுறுசுறுப்பாகியுள்ளனர். தேங்கிய கோப்புகள், படிப்படியாக நகரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்ட லோக்சபா தேர்தல், கடந்த மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம், மதுபானங்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்கள் கொண்டுசெல்லவும், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, அந்தியூர், பவானி, கோபி ஆகிய ஆறு சட்டசபைகளை உள்ளடக்கிய திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கலெக்டர், டி.ஆர்.ஓ., சப்கலெக்டர், துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள், தாசில்தார், துணை தாசில்தார்கள், முதுநிலை, இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., - கிராம நிர்வாக உதவியாளர் உள்பட வருவாய்த்துறையினர், வழக்கமான அலுவலக பணிகளை ஓரங்கட்டிவிட்டு, இரவு பகல் பாராமல், விடுப்பு எடுக்காமலும், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

பம்பரமாக சுழன்று பணி


தேர்தல் சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காக பம்பரமாக சுழன்றதால், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள பல்வேறு அரசு துறை அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்பட பெரும்பாலான அரசு அலுவலகங்களில், அதிகாரிகளை இருக்கைகளில் காண்பதே அரிதானது. கடந்த 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நாளன்றும், ஓட்டு எண்ணிக்கை பணிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர்.

லோக்சபா தேர்தல் திருவிழா முடிவடைந்ததையடுத்து, நேற்றுமுன்தினம், தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெறப்பட்டன. இதையடுத்து நேற்றுமுதல் அரசு அலுவலர்கள் அனைவரும், வழக்கமான அலுவல் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் தங்கள் டேபிளில் தேங்கிய கோப்புகளை புரட்டி, கணக்கு வழக்குகளை முடிப்பது; மக்களிடமிருந்து வந்த புகார்களை பரிசீலித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது; கள ஆய்வு உள்பட தங்கள் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us