/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாவட்ட கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிக்கு பரிசு மாவட்ட கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
மாவட்ட கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
மாவட்ட கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
மாவட்ட கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
UPDATED : ஜூலை 19, 2024 03:08 AM
ADDED : ஜூலை 18, 2024 10:53 PM

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற, அணிகளுக்கு சுழற்கோப்பை வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரை ஊக்குவிக்க பல்வேறு கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்படுகிறது.
அவ்வகையில், நடப்பாண்டு நடந்த ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற, பெத்தவாய் கிரிக்கெட் அகாடமி அணி, பள்ளி மாணவர்களுக்கான நடராஜன் சுழற்கோப்பை போட்டியில் வென்ற பிளாட்டோஸ் அகாடமி அணி, கல்லுாரி மாணவர்களுக்கான ஈஸ்ட்மேன் சுழற்கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற, பார்க்ஸ் கல்லுாரி அணி, மாவட்ட கிரிக்கெட் அணிக்கான நான்கு பிரிவுகளில் சுழற்கோப்பையை கைப்பற்றிய, எப்.எம்.எப்., கிரிக்கெட் கிளப், அரசன் கிரிக்கெட் கிளப் அணி, ஐ.டி., ஸ்போர்ட்ஸ் கிளப், மாருதி கிரிக்கெட் கிளப் அணிகளுக்கு சுழற்கோப்பை வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் 'ஈஸ்ட்மேன்' சந்திரன், செயலாளர் பிரகாஷ், இணை செயலாளர் செல்லமுத்து, மேலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர், சுழற்கோப்பைகளை வழங்கினார்.
---
திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது