/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து அவலம் பாண்டியன் நகர் பள்ளியின் பரிதாபம்சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து அவலம் பாண்டியன் நகர் பள்ளியின் பரிதாபம்
சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து அவலம் பாண்டியன் நகர் பள்ளியின் பரிதாபம்
சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து அவலம் பாண்டியன் நகர் பள்ளியின் பரிதாபம்
சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து அவலம் பாண்டியன் நகர் பள்ளியின் பரிதாபம்
ADDED : ஜூலை 03, 2024 12:00 AM

திருப்பூர், ஜூலை 3-சுற்றுச்சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், பாண்டியன் நகர் பள்ளியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, 2வது வார்டுக்கு உட்பட்ட பாண்டியன் நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியில் உரிய குடிநீர் வசதியில்லை. கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் பலவீனம் அடைந்து எந்த நேரத்திலும், கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி மேம்படுத்த வேண்டும். பயன்பாட்டில் உள்ள கழிப்பிடங்கள் சீரமைக்க வேண்டும். தேவையான அளவு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் தனிப்பிரிவு மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
----
பாண்டியன் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் ஆபத்தான நிலையில் உள்ளது.