ADDED : ஜூலை 28, 2024 12:20 AM
பல்லடம்;பல்லடம் அருகே மாதப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றில் மோதி, பெண் மயில் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
அவ்வழியாக சென்ற வாகனங்கள் உயிரிழந்த மயில் மீது அடுத்தடுத்து ஏறிச் செல்ல, இறந்த மயிலின் பாகங்கள் கூட மிஞ்சாத வகையில், சாலையோடு சாலையாக மயிலும் கரைந்தது. சிதறி கிடந்த பாகங்களை காகங்களும், பறவைகளும் கொத்தி தின்ன, மயில் இறந்ததற்கான அடையாளமே இல்லாமல் போனது. மனிதர்கள் அடிபட்டால் ஓடோடி வந்து உதவும் இச்சமுதாயத்தில், தேசிய பறவையான மயில் அடிபட்டதை, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் வேடிக்கை பார்த்துச் செல்வதை மட்டுமே காண முடிந்தது.