/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பால் கொள்முதல் விலை குறைப்பு: விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு பால் கொள்முதல் விலை குறைப்பு: விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு
பால் கொள்முதல் விலை குறைப்பு: விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு
பால் கொள்முதல் விலை குறைப்பு: விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு
பால் கொள்முதல் விலை குறைப்பு: விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு
ADDED : ஜூலை 07, 2024 01:26 AM

பல்லடம்;தனியார் பால் கொள்முதல் விலை குறைப்பு நடவடிக்கைக்கு, விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
தமிழகத்தில் தினசரி, 2 கோடியே 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், 15 சதவீதம் மட்டுமே ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீதத்தை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் போது, அதில் விவசாயிகளுக்கு எந்த பங்கும் கொடுப்பதில்லை.
ஆனால் தற்போது பால் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது என்ற காரணத்தை முன்வைத்து, பால் கொள்முதல் விலையை குறைத்துள்ளன. பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களையும் தனியார் நிறுவனங்கள் மூடி வருகின்றன.
பால்வளத் துறை அமைச்சர், தனியார் நிறுவனங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி குறைக்கப்பட்ட பால் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், அதுபோன்ற நிறுவனங்களை தமிழகத்தில் செயல்படவே அனுமதிக்க கூடாது என்ற நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். 20 லட்சம் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.