/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
ADDED : ஜூலை 03, 2024 09:34 PM
உடுமலை : கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், அதிகாரிகள் உடந்தையோடு, முறைகேடாக ஆவணம் பதியப்பட்டு, 10 கோடி மதிப்பிலான சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதை அறிந்த விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வீரப்பன் கூறுகையில், 'கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், பணத்தை பெற்றுக்கொண்டு, தனி நபருக்கு சொந்தமான நிலங்கள், கோவில் நிலங்கள் முறைகேடு ஆவணங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
இதில், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி, நாளை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என்றார்.