/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை காலம் நீட்டிப்பு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை காலம் நீட்டிப்பு
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை காலம் நீட்டிப்பு
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை காலம் நீட்டிப்பு
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை காலம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 20, 2024 01:38 AM
உடுமலை;உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,), நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தவறியவர்களும், தொழிற்கல்வியில் சேர விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ., யில் படிப்போருக்கு, 100 சதவீத வேலை வாய்ப்பு பெறுவதற்கும் உறுதி அளிக்கப்படுகிறது.
தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான முதற்கட்ட சேர்க்கை, ஜூன் மாதம் ஆன்லைன் வாயிலாக நடந்தது.
நேரடி மாணவர் சேர்க்கை, ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடந்தது. தற்போது மீண்டும் ஜூலை 31ம் தேதி வரை இச்சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடுமலை மட்டுமின்றி, தாராபுரம், திருப்பூர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும், ஜூலை இறுதி வரை சேர்க்கை நடக்கிறது.
சேர்க்கை பதிவு விடுமுறை நாட்கள் தவிர, வேலை நாட்களில் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணிவரை நடக்கிறது. கூடுதல் தகவல் பெறுவதற்கு, 99428 11559, 86680 41629, 99442 06017 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன், 5 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன், வங்கி கணக்கு எண் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன், நேரடியாக அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் சென்று சேர்க்கை பதிவு செய்யலாம்.