/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எம்.எஸ்.எம்.இ., செயலருடன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு எம்.எஸ்.எம்.இ., செயலருடன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு
எம்.எஸ்.எம்.இ., செயலருடன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு
எம்.எஸ்.எம்.இ., செயலருடன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு
எம்.எஸ்.எம்.இ., செயலருடன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 10, 2024 12:13 AM
திருப்பூர்;குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை செயலர் தாஸ், தற்போதைய தொழில் நிலவரம் குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில், மதியம், 12:00 மணிக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் செயலர் தாஸ், தமிழ்நாடு அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர், ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
தற்போதைய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறித்து விவாதிக்கும் இக்கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ், தொழில்துறை கமிஷனர் நிர்மல்ராஜ், இந்திய மாற்றும் தமிழக அரசின் அமைச்சக அதிகாரிகள் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான இந்நிகழ்ச்சியில், தொழில்துறையினர் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.