/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துாய்மை பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த எதிர்பார்ப்பு துாய்மை பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த எதிர்பார்ப்பு
துாய்மை பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த எதிர்பார்ப்பு
துாய்மை பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த எதிர்பார்ப்பு
துாய்மை பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:29 PM
உடுமலை:'உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மைப்பணியாளர்களுக்கு, முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேரூரட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும், துாய்மைப்பணியாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, முழு அளவிலான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரிக்கும் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இப்பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர் சிகிச்சை தேவைப்படும் பணியாளர்களுக்கு, காப்பீட்டு திட்ட செலவில் தேவையான சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், துாய்மை பணியாளர்களுக்கு முறையாக, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில், துாய்மை பணியாளர்கள் சீருடை அணியாமலும், கைகளுக்கு கிளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமலும், துாய்மைப்பணிகளை செய்யக்கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலேயே துாய்மைப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
குறிப்பிட்ட கால இடைவெளியில், அவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ரத்த பரிசோதனை, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.