/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு
பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு
பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு
பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 08, 2024 12:45 AM
உடுமலை;விளைநிலங்களில் உள்ள பண்ணைக்குட்டைகளில், உள்நாட்டு மீன் ரகங்கள் உற்பத்தி செய்ய, மீன் வளர்ச்சி கழகம் வாயிலாக ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக, கிணறு மற்றும் போர்வெல் அமைத்து, காய்கறி பயிர் மற்றும் நீண்ட கால பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயத்துக்கு ஆதாரமான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, விளைநிலங்களில், பண்ணைக்குட்டை அமைக்க, வேளாண்துறை மற்றும் இதர துறைகள் சார்பில், வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக பண்ணைக்குட்டை அமைக்க மானியமும் வழங்கப்படுகிறது.
இந்த பண்ணைக்குட்டைகளில், மழை நீரை சேகரிப்பதுடன், கிணறு மற்றும் போர்வெல் தண்ணீரை இருப்பு செய்து, பயிர்களுக்கு பாய்ச்சும் முறையையும் விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.
எனவே, ஆண்டு முழுவதும், இந்த பண்ணைக்குட்டைகளில், தண்ணீர் இருப்பு இருக்கும்.
விவசாயிகள் கூறியதாவது: பெரும்பாலான விளைநிலங்களில், பண்ணைக்குட்டைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குட்டைகளில், மீன் வளர்ப்பதால், கூடுதல் வருவாய் கிடைக்கும்.
குறிப்பாக, உள்நாட்டு மீன் ரகங்களை, வளர்ப்பதால், மீன் உற்பத்தியும் அதிகரிக்கும்; விவசாயிகளுக்கு வருவாயும் கிடைக்கும். எனவே, மீன் வளர்ச்சி கழகம் வாயிலாக பண்ணைக்குட்டைகளில், மீன் வளர்ப்புக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.