/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு
கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு
கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு
கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:34 PM
உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் முன்பதிவு செய்யவும், ரயில்களில் பயணம் செய்யவும் இங்கு வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதியும், குற்றங்களை தடுக்கவும் அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.