Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்ஜி., கவுன்சிலிங் ரேங்க் இரட்டையர்கள் அசத்தல்

இன்ஜி., கவுன்சிலிங் ரேங்க் இரட்டையர்கள் அசத்தல்

இன்ஜி., கவுன்சிலிங் ரேங்க் இரட்டையர்கள் அசத்தல்

இன்ஜி., கவுன்சிலிங் ரேங்க் இரட்டையர்கள் அசத்தல்

ADDED : ஜூலை 11, 2024 07:54 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த, 2 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

இதில், திருப்பூர் மாவட்டம், பல்லேகவுண்டம்பாளையம், சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த சுஜித் - 198.5 கட் ஆப் பெற்று தர வரிசையில் ஐந்தாம் இடத்தையும், சுகந்த் - 198 கட் ஆப் பெற்று எட்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இருவரும், ஊத்துக்குளி அடுத்த செங்காளிபாளையம் ஊராட்சி, அருவன்காட்டு பாளையத்தை சேர்ந்த தங்கராசு - பூங்கொடி தம்பதியரின் மகன்கள். தங்கராசு விவசாயி. பிளஸ் 2 தேர்வில் சுஜித், 600க்கு, 567 மதிப்பெண், சுகந்த், 564 மதிப்பெண் பெற்றிருந்தனர்.

இரட்டையர்கள் கூறுகையில், ''புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் உள்ளது. கம்ப்யூட்டர் இன்ஜி., படிப்பில் இணைய உள்ளோம். எங்களுக்கு ஆசிரியர்கள் ஸ்ரீதேவி, மாடசாமி, மயில்சாமி வழிகாட்டியாக இருந்தனர். அவர்களின் உந்துதலால், கணக்கு 100, உயிரியியல், வேதியியலில், 99 மதிப்பெண் பெற்றோம். உயர்கல்வியில் சாதிக்க முயற்சிப்போம்,'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us