/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 03, 2024 02:38 AM
உடுமலை;கண்ணம்மநாயக்கனுார் கிராமத்தில், குட்டை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஒன்றியத்தில், மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில் கண்ணம்மநாயக்கனுாரும் ஒன்று. கிராமத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் குட்டை, பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருந்தது.
இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் குட்டை முழுவதும் ஆக்கிரமிப்புகளாகவும், குடியிருப்புகள் அதிகரித்துள்ளன.
தற்போது கிராமத்தில் நீராதாரத்தின் தேவை அதிகரித்த நிலையில், பொதுமக்கள் குட்டையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடந்தது. கண்ணம்மநாயக்கனுார் உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்று மனு அளித்தனர்.
ஊராட்சி மக்கள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக, ஊராட்சிக்குட்பட்ட பொது குட்டையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. நீர்நிலையாக இருக்கும் பட்சத்தில், குடியிருப்புகள் அங்கு அமைக்கப்பட்டிருப்பதால் பாதிப்புகள் ஏற்படுகிறது.
விவசாய பாசனத்துக்கான நீர்வழியாகவும் குட்டை உள்ளது. தற்போது ஆக்கிரமிப்புகள் இருப்பதால், வேளாண்மையும் பாதிக்கப்படுகிறது. மேலும் கிராமத்தின் நிலத்தடி நீர்வளமும் குறைந்து வருகிறது. உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
பி.டி.ஒ., சுப்ரமணியம் கூறுகையில், ''ஆக்கிரமிப்பு அகற்றுவது ஒரு துறை மட்டுமே முடிவு செய்ய முடியாது. இதுகுறித்து, விசாரானை நடத்தி முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.