/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் கட்டண உயர்வு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:48 PM

திருப்பூர்:மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டுமென, அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் குமரன் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.பி., சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,கள் குணசேகரன், நடராஜன் பேசினர்.
தொடர்ந்து, ரேஷன் பொருள் வினியோகத்தை சீராக்க கோரியும், மின் கட்டணத்தை குறைக்க கோரியும் கோஷமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் ஹரிஹரசுதன், கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.