Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பளிச்'சிடாத மின் விளக்குகள்... எஸ்.ஆர்., நகர் வடக்கு இருள்மயம்

'பளிச்'சிடாத மின் விளக்குகள்... எஸ்.ஆர்., நகர் வடக்கு இருள்மயம்

'பளிச்'சிடாத மின் விளக்குகள்... எஸ்.ஆர்., நகர் வடக்கு இருள்மயம்

'பளிச்'சிடாத மின் விளக்குகள்... எஸ்.ஆர்., நகர் வடக்கு இருள்மயம்

ADDED : ஜூன் 20, 2024 05:41 AM


Google News
திருப்பூர் ; திருப்பூர், மங்கலம் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்., நகர் வடக்குப்பகுதியில், விநாயகர் கோவில் சாலையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் எரிவதில்லை.

அங்கு அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்குகளும் பெருமளவு எரிவதில்லை. அப்பகுதியின் பிரதான சாலையாக திகழ்ந்தாலும், இருள்மயமாக காட்சியளிக்கிறது.

குமரன் கல்லுாரியை ஒட்டிய குமரன் சாலையிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள தெருக்கள் பலவற்றிலும் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவில் வாகனங்களில் பயணிப்போரும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். மின் விளக்குகளை உடனடியாக பளிச்சிடச் செய்ய உரிய நடவடிக்கை தேவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us