Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பெற்றோரும் 'ஸ்மார்ட் போன்' வாங்க கல்வித்துறை அறிவுறுத்தல்

பெற்றோரும் 'ஸ்மார்ட் போன்' வாங்க கல்வித்துறை அறிவுறுத்தல்

பெற்றோரும் 'ஸ்மார்ட் போன்' வாங்க கல்வித்துறை அறிவுறுத்தல்

பெற்றோரும் 'ஸ்மார்ட் போன்' வாங்க கல்வித்துறை அறிவுறுத்தல்

ADDED : ஜூன் 03, 2024 11:46 PM


Google News
உடுமலை:தங்கள் மகன், மகள் குறித்த விபரங்களை, கல்வி செயல்பாடுகளை தினசரி தெரிந்து கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு பெற்றோரும் தங்களால் இயன்ற அளவில், 'ஸ்மார்ட் போன்'களை வாங்கிக் கொள்ள வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவ, மாணவியரின் அனைத்து செயல்பாடுகளையும் பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், புதிய தளம் உருவாக்கும் முயற்சி யை நடப்பு கல்வியாண்டு பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 'எமிஸ்' தளத்தில் மாணவ, மாணவியர் விபரங்களுடன் பெற்றோர் தகவல்களையும் சரிபார்த்து, சேர்க்கும் பணி ஒன்றரை மாதங்களாக நடந்து வருகிறது.

சரிபார்ப்பு விபரம் பூர்த்தியான மாணவ, மாணவியர் தகவல்களை கொண்டு, 'டிபார்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்' என்ற வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்படுகிறது.

தங்கள் மகன், மகள் குறித்த விபரங்களை, கல்வி செயல்பாடுகளை தினசரி தெரிந்து கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு பெற்றோரும் தங்களால் இயன்ற அளவில், 'ஸ்மார்ட் போன்களை' வாங்கிக் கொள்ள வேண்டும்; குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us