Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுற்றுச்சூழலுக்கு உகந்த சாயம், ரசாயனம் 'டெக்ஸ்டைல் கலர் ஏ.ஜி., இந்தியா' அபாரம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த சாயம், ரசாயனம் 'டெக்ஸ்டைல் கலர் ஏ.ஜி., இந்தியா' அபாரம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த சாயம், ரசாயனம் 'டெக்ஸ்டைல் கலர் ஏ.ஜி., இந்தியா' அபாரம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த சாயம், ரசாயனம் 'டெக்ஸ்டைல் கலர் ஏ.ஜி., இந்தியா' அபாரம்

ADDED : ஜூலை 22, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
அவிநாசி:சுவிட்சர்லாந்தின் டெக்ஸ்டைல் கலர் ஏ.ஜி., நிறுவனமும், திருப்பூர் வர்ணா குழுமமும் இணைந்து டெக்ஸ்டைல் கலர் ஏ.ஜி., இந்தியா என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா ேஹாட்டலில், இந்நிறுவனம் சார்பில், கருத்தரங்கு நடந்தது. டெக்ஸ்டைல் கலர் ஏ.ஜி., இந்தியா துணைத் தலைவர் சுனில் பாட்டீல் முன்னிலை வகித்தார்.

நிர்வாக இயக்குனர் டெட்லெப் பிஷர் பேசுகையில், ''தற்போது சாயம் மற்றும் ரசாயனங்களில் புதிய தயாரிப்புகள், நவீனத் தொழில்நுட்பங்களை நாங்கள் அறிமுகம் செய்துள்ளதோடு, இந்திய தொழில்துறையினருக்கு சேவையை துவங்கியுள்ளோம்'' என்றார்.

டெக்ஸ்டைல் கலர் ஏ.ஜி., நிறுவன இந்திய இயக்குனர் வொல்ப்காங் ஹேபர்ல் பேசுகையில், ''சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், சேமிப்பு மற்றும் சிக்கனம் மிக்கதாகவும், தரத்தில் உயர்ந்ததாகவும் எங்கள் தயாரிப்புகள் விளங்குகின்றன.

கரியமில வாயு உமிழ்வுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பு நடப்பதோடு, கணிசமான நீர் மற்றும் ஆற்றல் சேமிப்பு நடக்கிறது. செயல்முறை நேரமும் குறைகிறது. திருப்பூர் தொழில்துறையினருக்கு இது உதவிகரமானதாக அமையும்'' என்றார்.

ஏற்பாடுகளை திருப்பூர் வர்ணா குழும நிர்வாக இயக்குனர் சதீஷ்(எ)கோதண்டபாணி மற்றும் குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான டையிங், சாயம் மற்றும் ரசாயனங்கள் தயாரிப்பு நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us