ADDED : ஜூலை 07, 2024 11:58 PM
திருப்பூர்;சிவகங்கையை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 29. இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தில் தங்கி, நுால் கடையில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே அறையில் தங்கி வசந்த், 24 என்பவரும், ஆனந்தராஜ் உடன் வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம், ஆனந்தராஜ், வசந்த் உள்ளிட்ட நண்பர்கள் சிலருடன் அறையில் மது அருந்தினர். போதையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வசந்த், அங்கிருந்த கத்தியை எடுத்த ஆனந்தராஜை குத்தினார். ரத்த வெள்ளத்தில் வெளியேறிய அவர் ரோட்டில் சரிந்து விழுந்தார். அக்கம்பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் பரிதாபமாக ஆனந்தராஜ் இறந்தார். கொலை குறித்து வசந்தை கைது செய்து, நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.