/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'குடிநீர் வினியோகம் தாமதம் கூடாது' 'குடிநீர் வினியோகம் தாமதம் கூடாது'
'குடிநீர் வினியோகம் தாமதம் கூடாது'
'குடிநீர் வினியோகம் தாமதம் கூடாது'
'குடிநீர் வினியோகம் தாமதம் கூடாது'
ADDED : ஜூன் 27, 2024 10:59 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், அனைத்து பிரிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். மேயர் தினேஷ் குமார், தலைமை வகித்து பேசியதாவது:
வரி வருவாயில் ஏறத்தாழ, 113 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் வரி வசூலில் மூன்றாமிடம் பெற்றுள்ளோம். பல பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. முழுமையாகவும், முறையாகவும் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
குடிநீர் தேவையான அளவு பெறப்படுகிறது. முறையாக வினியோகம் செய்தால், அனைத்து பகுதியிலும், 3 நாளுக்கு ஒரு முறை என்ற வகையில் வினியோகிக்கப்படும். குழாய் உடைப்புகள் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.
விதிமீறிய குழாய் இணைப்புகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பணியாளர்கள் வீடுகளில் இணைப்புதாரர்களிடம் பணம் வசூலிக்கக்கூடாது.
குப்பை தேக்கம் ஏற்பட்டால் ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும். வரி விதிப்பு, பெயர் மாற்றம், குழாய் இணைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாக உரிய அலுவலகத்தில் உரிய உதவி கமிஷனரிடம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். களப்பணியாளர்கள் இது போன்ற விண்ணப்பங்களைப் பெறக் கூடாது.
இவ்வாறு, மேயர் கூறினார்.