/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திடக்கழிவுகளால் மூடப்பட்ட நீர் வழித்தடங்கள் மழைக்கு முன் துார்வார வேண்டும் திடக்கழிவுகளால் மூடப்பட்ட நீர் வழித்தடங்கள் மழைக்கு முன் துார்வார வேண்டும்
திடக்கழிவுகளால் மூடப்பட்ட நீர் வழித்தடங்கள் மழைக்கு முன் துார்வார வேண்டும்
திடக்கழிவுகளால் மூடப்பட்ட நீர் வழித்தடங்கள் மழைக்கு முன் துார்வார வேண்டும்
திடக்கழிவுகளால் மூடப்பட்ட நீர் வழித்தடங்கள் மழைக்கு முன் துார்வார வேண்டும்
ADDED : ஜூன் 06, 2024 11:37 PM

உடுமலை:பருவ மழை துவங்கியுள்ள நிலையில், உடுமலை நகரின் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், அமைந்துள்ள இயற்கை நீர் வழித்தடங்களை துார்வார, நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும், மழை வெள்ளம் எளிதாக வெளியேறும் வகையில், இயற்கை நீர் வழித்தடங்கள் அமைந்துள்ளன.
உடுமலையின் தெற்கு பகுதி, ஏழு குளங்கள் நிரம்பி வெளியேறும் உபரி நீர் மற்றும் மேற்கு பகுதி கிராமங்களில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில், 7 கி.மீ.,நீளத்தில் ராஜவாய்க்கால் ஓடை அமைந்துள்ளது.
அதே போல், பிரதான ரோடுகளான, பழநி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு ஆகிவற்றில் வரும் மழை நீர் வெளியேறும் வகையில், கழுத்தறுத்தான் ஓடை, 11 கி.மீ.,நீளத்தில் அமைந்துள்ளது.
மேலும், ஒட்டுக்குளம் மற்றும் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையிலும், நகர பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது.
அதே போல், நாராயணன் காலனி ஓடை, நெடுஞ்செழியன் காலனி ஓடை மற்றும், 600 கி.மீ.,நீளத்திற்கு மழை நீர் வடிகால்களும் அமைந்துள்ளன.
நீர் நிலைகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அலட்சியம் காரணமாக, தற்போது ஓடைகள் இரு புறமும் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு குறுகலாக மாறியுள்ளது.
அதிலும், கழிவு நீர் நேரடியாக ஓடைகளில் வெளியேற்றப்படுவதோடு, நகராட்சி, கணக்கம்பாளையம் ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளும், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாக, நீர் நிலைகள் மாற்றப்பட்டுள்ளன.
இதனால், பல இடங்களில் நீர் வழித்தடங்கள் திடக்கழிவுகளால் மறிக்கப்பட்டும், கழிவு நீர் தேங்கி, செடி, கொடிகள், புற்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகின்றன.
தற்போது, தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், அதிக மழை பெய்தால், வெள்ள நீர் வெளியேற வழியின்றி, அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் பிரதான ரோடுகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, பாதிப்பு ஏற்படுவதற்கு முன், நீர் நிலைகளை துார்வாரவும், எடுக்கப்படும் திடக்கழிவுகளை அப்புறப்படுத்தவும், நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.