Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எண்ணங்கள் இனிதே நிறைவேறுமா? மத்திய பட்ஜெட் மீது எதிர்பார்ப்புடன் தொழில்துறையினர்

எண்ணங்கள் இனிதே நிறைவேறுமா? மத்திய பட்ஜெட் மீது எதிர்பார்ப்புடன் தொழில்துறையினர்

எண்ணங்கள் இனிதே நிறைவேறுமா? மத்திய பட்ஜெட் மீது எதிர்பார்ப்புடன் தொழில்துறையினர்

எண்ணங்கள் இனிதே நிறைவேறுமா? மத்திய பட்ஜெட் மீது எதிர்பார்ப்புடன் தொழில்துறையினர்

ADDED : ஜூலை 22, 2024 12:09 AM


Google News
திருப்பூர்:பசுமை ஆற்றல் உற்பத்தி மானிய திட்டம், அவசர கால கடன் திட்டம், வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு என மத்திய பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, திருப்பூர் பின்னலாடைத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை (23ம் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில், நாட்டில் அன்னிய செலாவணியை அதிகம் ஈர்க்கும், பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிவிப்புகள் இடம்பெறுமா என்று, தொழில்துறையினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கொரோனாவுக்கு பிறகு, மீண்டு எழுந்த பின்னலாடை தொழில், பலகட்ட சோதனைகளால் ஸ்தம்பித்தது. இருப்பினும், தொழில்துறையினரின் விடாமுயற்சியால், தட்டுத்தடுமாறி இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

ஆடை இறக்குமதி

கட்டுப்பாடு தேவை

மத்திய பட்ஜெட்டில், பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்புகள்:

* தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம், 2022 மார்ச் மாதத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, இத்திட்டத்தை மீண்டும் முன்தேதியிட்டு அறிவிக்க வேண்டும்; நிலுவை மானியத்தை விடுவிக்க வேண்டும்.

* 'பி.எல்.ஐ., -2.0' திட்டத்தை, திருத்திய விதிமுறைகளுடன், குறைந்தபட்ச முதலீட்டின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

* பிரிட்டன், ஐரோப்பியா, நியூசிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்.

* வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு.

* 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியத்தை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 சதவீதமாகவும்; மற்ற நிறுவனங்களுக்கு, 3 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும்.

அவசர கால கடன்

திட்ட செயல்பாடு

* மின் கட்டண சுமையை குறைக்கும் வகையில், பசுமை ஆற்றல் உற்பத்திக்கான மானிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

* கொரோனா காலத்தில் வழங்கியது போல், அவசரகால கடன் திட்டம் மீண்டும் ஒருமுறை செயல்படுத்தப்பட வேண்டும்.

* சர்வதேச சந்தை வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்ற, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு திருப்பூர் மாறியாக வேண்டும். அதற்கு வழிகாட்டும் வகையில், புதிய ஆராய்ச்சி மையம் திருப்பூரில் அமைய வேண்டும். புதிய தொழில் துவங்க முதலீட்டு மானியம் வழங்க வேண்டும்.

* பருத்தி உற்பத்தியை பெருக்குவதுடன், பஞ்சு இறக்குமதி வரி, 11 சதவீதத்தை முற்றிலும் நீக்க வேண்டும்.

* தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், தேசிய பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்.

*

உள்கட்டமைப்பு மேம்பாடு

நம்பிக்கை மெய்ப்படட்டும் திருப்பூரில் இருந்து ஈட்டப்படும் அன்னிய செலாவணி வருவாயில், 1 சதவீதத்தை, நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும். வஞ்சிபாளையத்தில் கூட்ஸ் ெஷட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவை, நீலம்பூர் வரை அமையும் மெட்ரோ ரயில் சேவையை, திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். திருப்பூர் பகுதியில், சிறப்பு பாடப்பிரிவுகளுடன் கூடிய, , பின்னலாடை தொழில் சார்ந்த ஐ.ஐ.டி., அமைக்க வேண்டும்.குறிப்பாக, நலிவு நிலையில் உள்ள பின்னலாடை தொழில்களுக்கு, உயிர் கொடுக்கும் வகையிலான, நிதி ஆதார அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த திருப்பூர் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us