ADDED : ஜூலை 21, 2024 10:54 PM
திருப்பூர் ஸ்ரீநகரைச் சேர்ந்த முருகன் மகள் அனிதா, 23.
கல்லுாரி மாணவி; கிக் பாக்ஸிங் வீராங்கனை; தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். வரும் 24 முதல் 28 ம் தேதி வரை கோவாவில் தேசிய சீனியர் கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அனிதா தேர்வாகியுள்ளார். போட்டிகளில் பங்கேற்க அவருக்கு உபகரணங்கள் தேவைப்பட்டது. இதற்காக திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் 30 ஆயிரம் ரூபாய் வழங்க முன் வந்தார். இதற்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் அனிதாவிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
----