ADDED : ஜூலை 02, 2024 02:14 AM
உடுமலை;உடுமலை அனுகிரகா சர்வதேச பள்ளியில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.
காமராஜர் பிறந்தநாளையொட்டி, மதுரையைச்சேர்ந்த என்எம்எஸ் அறக்கட்டளையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான திருப்பூர் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, அனுகிரகா சர்வதேச பள்ளியில் நடந்தது.
பள்ளித்தாளாளர் அருட்செல்வன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.
உடுமலை, தாராபுரம் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், விருதுநகரில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பங்கேற்ற மாணவர்ளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளை ஆசிரியர்கள் கண்ணபிரான், சவுந்தரபாண்டியன் ஒருங்கிணைத்தனர்.