ADDED : ஜூன் 29, 2024 02:48 AM
உடுமலை;உடுமலையில் நடக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மதுரை என்எம்எஸ் அறக்கட்டளையின் சார்பில், காமராஜர் பேச்சுப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இதன்படி, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மூன்று பிரிவுகளாக, பள்ளி மாணவர்களுக்கான திருப்பூர் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நாளை (30ம் தேதி) நடக்கிறது.
உடுமலை தாராபுரம் ரோடு துங்காவியில் உள்ள அனுகிரக இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்கிறது.
மாவட்ட அளவில், முதல் ஆறு இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.
விருப்பமுள்ள மாணவர்கள் கண்ணபிரான் -- 8778201926 மற்றும் சவுந்திரபாண்டியன் - 7373736199 என்ற எண்களை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.